பள்ளிபாளையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ரோந்து பணி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் ்கிடைத்தது.
அதன்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பள்ளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் 22 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் விசாரணையில் பள்ளிபாளையத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவர் ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விஜய்யை கைது செய்ததோடு 1,100 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.