சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம், மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம், மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாவிடம், பூம்புகார் மீனவ கிராம தலைவர் ஏழுமலை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
நாங்கள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவந்தோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களில் சின்னூர்பேட்டை முதல் கொடியம்பாளையம் வரை 25 கிராமங்களில் சுருக்குமடி வலை மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
சுருக்குமடி வலை
கடந்த 2020-ம் ஆண்டு தரங்கம்பாடி, வானகிரி உள்ளிட்ட 8 கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை நிறுத்தி கொண்டும், எங்களையும் தொழில் செய்யவிடாமல் தடுக்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் செய்யப்படவில்லை.. இதனால் மாவட்டத்தில் 15 கிராமங்களில் உள்ள மீனவர்கள் வறுமையாலும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மன உளச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.
அனுமதிக்க வேண்டும்
எனவே மற்ற மாவட்டங்களை போல எங்களையும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும்.நாங்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடிப்பதால் அருகில் உள்ள மீனவ கிராமங்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது.மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளுக்கு உட்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தொழில் செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனுவை அளித்தனர்.