எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தென்காசி, மானாமதுரையில் நின்று செல்லும்

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தென்காசி, மானாமதுரையில் நின்று செல்லும்

Update: 2023-09-05 20:49 GMT


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 25-ந் தேதி முதல் ரெயில் நிறுத்தங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த ரெயில் (வ.எண்.16361/16362) மாவேலிக்கரா, கருங்காப்பள்ளி, சாஸ்தன்கோட்டை, குந்த்ரா, அவுனீசுவரம், தென்மலை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், மானாமதுரை, பேராவூரணி மற்றும் அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் போது தென்காசியில் இரவு 8.15 மணிக்கும், கடையநல்லூரில் இரவு 8.26 மணிக்கும், சங்கரன்கோவிலில் இரவு 9.02 மணிக்கும் புறப்படும். மானாமதுரையில் இருந்து நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரெயில் மானாமதுரையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கும், சங்கரன்கோவிலில் இருந்து நள்ளிரவு 3.17 மணிக்கும், கடையநல்லூரில் நள்ளிரவு 3.38 மணிக்கும், தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து நள்ளிரவு 3.52 மணிக்கும் புறப்படும். தென்னக ரெயில்வேயின் இந்த அறிவிப்புக்கு தென்மாவட்ட பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்