கோழிப்பண்ணைக்கு வழங்கிய அனுமதி ரத்து

கோழிப்பண்ணைக்கு வழங்கிய அனுமதி ரத்து

Update: 2022-07-27 16:58 GMT

தாராபுரம்

தாராபுரம் அருகே கோழிப்பண்ணைக்கு வழங்கிய அனுமதியை ஊராட்சி நிர்வாகம் ரத்து செய்தது.

கோழிப்பண்ணை

தாராபுரத்தை அடுத்த நல்லாம்பாளையம் ஊராட்சி பழனி கவுண்டன்வலசில் கேரளாவை சேர்ந்த கோழிப்பண்ணை நிர்வாகம் கோழிப்பண்ணை அமைக்க அனுமதி கேட்டு ஊராட்சிநிர்வாகத்திடம் விண்ணப்பித்தது. இதையடுத்து கோழிப்பண்ைண நடத்த 11.1.2022 அன்று ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து கோழிப்பண்ணை நிர்வாகம் பணியை தொடங்கியது.

இந்த நிலையில் கோழிப்பண்ணை தொடங்கினால் ஈக்களால் தொல்லை ஏற்படும் என்றும், எனவே கோழிப்பண்ணைக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பாலகிருஷ்ணன் தலைமையில் நல்லாம்பாளையம் ஊராட்சியில் மனு கொடுத்தனர்.

அனுமதி ரத்து

அதனை பரிசீலனை செய்த ஊராட்சி நிர்வாகம் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டும் உயர்நீதி மன்ற உத்தரவை ஏற்றும் கடந்த 22.7.22 அன்று நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் கோழிப்பண்ணை முன்பு நோட்டீசும் ஒட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக உள்ளனர்.கோழிப்பண்ணைக்கு உத்தரவு வழங்கிய ஊராட்சி நிர்வாகமே அனுமதி ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்