பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-10-01 18:45 GMT

ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வேந்தை சிவா தலைமை தாங்கினார். பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பாவெல், ஐந்திணை மக்கள் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் ராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். ஆதிதமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் வரவேற்றார். மாநிலகுழு உறுப்பினர் யோகேஸ்வரன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், சுதந்திர வளர்ச்சி விவசாய சங்க குணசேகரன், திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் பெரியார்முத்து, உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம் சந்தனமேரி, ஆதிதமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் இரணியன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உதயகுமார், வண்ணார் பேரவை மாவட்ட செயலாளர் அருண்குமார் ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பெரியார் பேரவை மாவட்ட செயலாளர் சம்பை பிரபாகரன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்