பெரியார் பிறந்த நாள் விழா

தென்காசி நகர தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-09-18 18:45 GMT

தென்காசி:

தென்காசி நகர தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகர தி.மு.க. அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சாதிர் தலைமை தாங்கி பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமையா, நகர பொருளாளர் சேக் பரீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்