பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணாசாலையில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் மாவட்ட அவைத்தலைவர் த.வேணுகோபால், மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் எம்.ஆர்.கலைமணி, நா.ப.கார்த்திகேயன், அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.