கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா
கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடந்தது
சேத்துப்பட்டு
கோழிப்புலியூர் கிராமத்தில் பெரியாண்டவர் திருவிழா நடந்தது.
சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் திருவிழா நடந்தது. இதனையொட்டி களிமண்மூலம் 25 அடி நீளத்துக்கு பெரியாண்டவர் உருவ சிலை செய்யப்பட்டு, சுற்றிலும் 108 விநாயகர் சிலை உருவாக்கி பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.
இதில் பல்வேறு கிராமத்தில் இருந்து வேண்டுதலுக்காக வந்து பொங்கல் வைத்தனர். பின்னர் பம்பை, உடுக்கை நாதஸ்வரம் கச்சேரி இசையுடன் குறி கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பொங்கல் பானை, கூடையுடன் ஊர்வலம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.