பெரியநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம்

பெரியநாயகி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-06-09 18:47 GMT

கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை நாட்டை சேர்ந்த மங்களாக்கோவிலில் பெரியநாயகி அம்பாள் சமேத ஆதி மத்பார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காவிரி, கங்கை போன்ற புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பெரியநாயகி அம்பாள் சமேத ஆதி மத்பார்ஜுனேஸ்வரர் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் திருமலை துரைராஜா, கல்லாக்கோட்டை நாட்டு அம்பலக்காரர் குஞ்சையா மால்சுத்தியார், கல்லாக்கோட்டை நாட்டார்கள் மற்றும் ஊரார்கள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர், ஒன்றிய பெருந்தலைவர், வட்டாட்சியர் மற்றும் கிராமமக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்