பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:இன்று நடக்கிறது
பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதற்கு உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி தலைமை தாங்குகிறார். இதில் பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் கடமலைக்குண்டு ஆகிய வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) மணிகண்டன் தெரிவித்தார்.