பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில்பயிர் சாகுபடி கருத்தரங்கு

பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் பயிர் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-02-18 18:45 GMT

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில சமச்சீர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தோட்டக்கலை வேளாண்மை இணை இயக்குனர் செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ராஜா துரை, இணை பேராசிரியர்கள் ஜெயக்குமார், சுகன்யா கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் இருந்து 150 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இணை பேராசிரியர் முத்துராமலிங்கம், உதவி பேராசிரியர் உமாமகேஸ்வரி, இளநிலை ஆராய்ச்சியாளர் தனலட்சுமி, திட்டப்பணியாளர் தீபிகா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்