பெரியகுளம் நகர அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தீர்மானம்

பெரியகுளம் நகர அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Update: 2022-07-05 17:05 GMT

பெரியகுளம் நகர அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு நகர அவைத் தலைவர் கோம்பையன் தலைமை தாங்கினார். நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழு தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அப்துல் சமது வரவேற்றார். கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை பிரிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியை கண்டிப்பது உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு, கீழவடகரை ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், நகர மகளிர் அணி நிர்வாகிகள், நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்