சாலையோரம் காயத்துடன் கிடந்த சினை எருமை சாவு
சாலையோரம் காயத்துடன் கிடந்த சினை எருமை சாவு
அவினாசி
அவினாசி திருப்பூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் எருமை மாடு படுகாயம் அடைந்த நிலையில் சாலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் உள்ளிட்டோ எருமை மாட்டை மீட்க முயற்சி மேற்கொண்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு எருமை மாட்டை பரிசோதித்தார். அப்போது எருமை மாட்டின் முகம் தாடையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த மாடு அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாடு செத்தது.
பிரேத பரிசோதனையில் அதன் வயிற்றில் இறந்த நிலையில் கன்றுகுட்டி இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த மாடு கால்நடை மருத்துவமனை வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. வாகனத்தில் மாடுகள் கொண்டு சென்ற போது அந்த மாடு தவறி சாலையில் விழுந்ததா? அல்லது மாடு கருவுற்று இருப்பதை தெரிந்து அதைக்கொண்டு சென்றவர்களே வாகனத்தில் இருந்து கீழே தள்ளி விட்டார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
------------