சர்வதேச இரட்டையர் பூப்பந்து போட்டியில் பேரணாம்பட்டு மாணவர்கள் சாதனை
சர்வதேச இரட்டையர் பூப்பந்து போட்டியில் பேரணாம்பட்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பேரணாம்பட்டு, ஜூலை.22-
சர்வதேச இரட்டையர் பூப்பந்து போட்டியில் பேரணாம்பட்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பேரணாம்பட்டு அருகே கொண்டம் பல்லி கிராமத்தில் இயங்கி வரும் மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹெப் கலை அறிவியல் கல்லூரியில் பேரணாம்பட்டை சேர்ந்த இனாமுல் ஹக் (வயது 18), முஹம்மத் ஷேபான் (18) பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றனர். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் நடந்த பூப்பந்து போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றனர். கடந்த 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நேபாள நாட்டில் நடந்த சர்வதேச போட்டியில் இந்தியா, சீனா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதிலும் இந்தியா சார்பில் இனாமுல் ஹக், முஹம்மத் ஷேபான் ஆகிய இருவரும் இரட்டையர் பூப்பந்து போட்டியில் பங்கேற்று முதல் பரிசாக கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வென்றனர்.