பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; நாளை மறுநாள் நடக்கிறது

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-07-26 18:19 GMT

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்