பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்

வரகூர் பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது.

Update: 2023-04-20 10:45 GMT

வாணாபுரம்

வாணாபுரம் அருகே உள்ள வரகூரில் பிரசித்தி பெற்ற பிடாரி காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், வெண்ணெய், பன்னீர் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் 11 மணிக்கு மேல் மிளகாய் யாகம் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் மிளகாய் போட்டு தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்