மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூரில் அண்ணா சிலை அருகே மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருமானூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜோதிவேல் முன்னிலை வகித்தார். பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் கால முறை ஊதியம் வழங்க வேண்டும். 9.11.2011 முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.