இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
சிவகங்கை நகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு இயக்கம் நகர் துணை செயலாளர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், சிவகங்கை நகரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் உடனடியாக பல்வேறு கட்டமைப்புகளையும் நரம்பு, மூளை, கேன்சர் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத்தவும், மருத்துவ கல்லூரியை சுற்றியுள்ள முதர்மண்டி உள்ள பகுதிகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் சிவகங்கை பகுதி மக்களுக்கு இன்னும் பல்வேறு வகையான அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கோரியும் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. இதில் கங்கை சேகரன், காசிநாதன், ராஜாராம், முனியாண்டி, ராஜேந்திரன், மகாலிங்கம், சாரதா, கோகிலா, மாரியம்மாள், லட்சுமி, வீரையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.