மக்கள் சந்திப்பு முகாம்
திருவாவடுதுறை, திருவாலங்காடு ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை, திருவாலங்காடு ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜம்பு கென்னடி, காங்கிரஸ் மயிலாடுதுறை நகர தலைவர் ராமானுஜம், வட்டாரத்தலைவர் பரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை எம்.பி.யுமான மணிசங்கர் அய்யர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 2 ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.அப்போது பேசிய மணிசங்கர் அய்யர் பொதுமக்களின் குறைகளின் மீதான மனுக்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு அதிகாரியிடம் வழங்கி உரிய தீர்வு எட்டப்படும் என்றார். இதில் முன்னாள் வட்டார தலைவர் மணி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.