மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-06 18:51 GMT

மணிப்பூரில் நடக்கும் வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும், சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மத்திய மாவட்ட செயலாளர்கள் பிலிப் மாணிக்கராஜ், ஜெகதீஷ், துணைச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் மண்டல செயலாளர் டாக்டர் பிரேமநாத் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்