மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-19 19:13 GMT

சிவகாசி, 

விருதுநகர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் நாகராஜன், முகுந்தன், ராஜ்குமார், பாலாஜி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு மின் கண்டன உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்