மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் சந்திப்பு...!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் இன்று சந்தித்து பேசினர்.

Update: 2023-10-17 11:11 GMT

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சிங்கப்பூர் தூதரக தலைமை அதிகாரி பங் டிஸ் சியாங்க் எட்கர், தூதரக துணை அதிகாரி பசில் டிங் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் கமல்ஹாசனுடன், 'இந்தியா கலாசாரம் குறித்தும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாடு, வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியும் ஆலோசித்தனர் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்