மக்கள் நேர்காணல் முகாம்

திருச்செங்காட்டங்குடியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.

Update: 2022-11-17 18:45 GMT

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூர், கீழப்பூதனூர், புதுக்கடை உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திருச்செங்காட்டங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, கீழப்பூதனூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாய கூடம், ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு சுவர் அமைத்து தரக்கோரி 120-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர்கள்வெங்கட்ராமன், கார்த்திகேசன், சரவணன், சுந்தரபாண்டியன், ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்