மக்கள் நேர்காணல் முகாம்

மக்கள் நேர்காணல் முகாம்

Update: 2022-10-12 18:45 GMT

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, வருவாய்த் துறை சார்பில் பட்டா ஆணை, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனுமதி ஆணை, வேளாண்மை இடுபொருட்கள் என 32 பயனாளிகளுக்கு ரூ.3லட்சத்து 64 ஆயிரத்து 570 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயராஜ், செல்வி மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்