மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 175 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2022-12-12 18:45 GMT

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. அப்போது மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்த்தென்றல் தலைமையில் வந்த ஊராட்சி பொதுமக்கள் கடுவங்குடி வடக்குத்தெரு மண்சாலையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 175 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்