மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 153 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பனங்குடி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.6,300 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிளையும், நத்தப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதுக்குப்பின் அணியும் காதொலி கருவியினையும், கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த வசந்தலாதேவி என்பவருக்கு பாதுகாவலர் பணி நியமன ஆணையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) ராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.