மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2022-07-25 23:15 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

முன்னதாக கலெக்டர் அலுவலக தரைத்தளத்திற்கு வந்து அங்கிருந்த மாற்றுத்திறனாளிடம் மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்