மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சேமங்கலம் ஊராட்சியில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

Update: 2023-03-13 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள சேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எருமல் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் இன்று(செவ்வாய்க்கிழமை) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்குகிறார். இந்த முகாமில் சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, புதிய வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை நேரில் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்