மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

Update: 2023-07-11 18:45 GMT

பனைக்குளம், 

மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி ஊராட்சிகளில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். பெறப்பட்ட மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் தேர்போகி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம் ஊராட்சி தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள், இந்து சமூக கிராம தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். இதில் காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன், மண்டபம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துக்குமார், பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பவுசியா பானு, காங்கிரஸ் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராஹிம், துணைத்தலைவர் ஹனிப் கான், மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி, திருவாடானை சட்டமன்ற தொகுதி மகிளா காங்கிரஸ் தலைவி ஜீனத்து நிஷா, மாவட்ட மனித உரிமை துறை தலைவர் அபுதாஹீர், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், அன்வர் அலி நத்தர், சேது பாண்டி, நகர் தலைவர் கோபி, மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, சேதுபதி, ஆறுமுகம், இளைஞர் அணி நவாஸ், அல்அமீன், முகமது பயாஸ், தாஜுதீன், சந்தானம், சேகு சபியுல்லா, முருகேசன், அன்வர் அலி, முஜீப் ரகுமான், ரவி, பஞ்சாட்சரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்