மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 18:45 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நெல்லை மாநகராட்சியில் பணிகள் முடங்கி கிடப்பதாக கூறி கண்டித்தும், மாநகராட்சி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் வள்ளிக்கண்ணு, தென்மண்டல அமைப்பாளர் வெங்கடேச பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகுமார் பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் நம்பிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்