தமிழகத்தில் மக்களின் கொண்டாட்டத்தை தடை செய்யக்கூடாது: பா.ஜனதா வலியுறுத்தல்

உலகமே உன்னிப்பாக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

Update: 2024-01-21 15:14 GMT

சென்னை,

தமிழக பா.ஜனதா மாநிலத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகமே உன்னிப்பாக ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள கோவில்கள் அனைத்திலும் இந்த உற்சாகத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு, இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இத்தகைய கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தி, தடை போட முயலும் இந்து விரோத தி.மு.க. அரசு, தன் ஆணவ போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் தங்களின் ஊர்களில் உள்ள கோவில்களில் மகிழ்ச்சியோடு கொண்டாட தடை செய்யாமல் இருப்பது சிறப்பை தரும். இல்லையேல் தி.மு.க. அரசு சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்கும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

மேலும் செய்திகள்