மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-14 13:46 GMT

ஆரணி

ஆரணி நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பாக திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில் நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடந்தது.

இ்தில் ஆரணி நகரில் உள்ள 2 பஸ் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது அதனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 2 பஸ் நிலையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறை அமைக்கப்படவில்லை. அதனால் நகராட்சியை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரிடம் ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் நகரசபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்ட தகவல் என்ன என கேள்வி எழுப்பி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்