தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார்.

Update: 2023-06-16 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இ-சேவை மையம்

தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ- சேவை மையம் உரிமம் பெற்று இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது. அரசு விதிகளின் படி மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணைய தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினியில் நல்ல அறிவும் தமிழ், ஆங்கிலம் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்கவேண்டும். இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணினி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.

உரிமம் வழங்கப்படும்

குறைந்த பட்சம் 2 எம்பிபிஎஸ் அலைவரிசையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய தள இணைப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் இ- சேவை மையம் அமைக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு இ- சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும். படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ- சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள இந்த வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்