தீபாவளி முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் - 2 நாட்களில் லட்சத்தை தாண்டிய ஆம்னி பஸ்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

Update: 2022-10-23 11:24 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். ரெயில்கள், ஆம்னி பஸ்கள், அரசு பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், விமானங்கள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் ஆம்னி பஸ்களில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 960 பேர் பயணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21-ம் தேதி சென்னையில் இருந்து ஆயிரத்து 350 ஆம்னி பஸ்களில் 48 ஆயிரத்து 600 பயணிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 510 ஆம்னி பஸ்களில் 18 ஆயிரத்து 360 பேரும் பயணித்துள்ளனர்.

அதேபோல, கடந்த 22-ம் தேதி சென்னையில் இருந்து 902 ஆம்னி பஸ்களில் 32 ஆயிரத்து 500 பயணிகளும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 486 ஆம்னி பஸ்களில் 17 ஆயிரத்து 500 பயணிகளும் பயணித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்