அரசு பஸ் இயக்காததால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள்
பேரணாம்பட்டில் இருந்து அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பஸ் இயக்காததால் பல மணி நேரம் மலை கிராம மக்கள் காத்திருந்தனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டில் இருந்து அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பஸ் இயக்காததால் பல மணி நேரம் மலை கிராம மக்கள் காத்திருந்தனர்.
அரசு பஸ்
பேரணாம்பட்டில் இருந்து அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வந்தது. அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஒரு அரசு பஸ்சை நம்பி பேரணாம்பட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக அரவட்லாமலை கிராமத்திற்கு இந்த பஸ எப்.சி. காரணமாக இயக்கப்படாமலும் இதற்கு பதிலாக மாற்று பஸ் விடாததால் மலை கிராம மக்கள் பேரணாம்பட்டுக்கு வந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி, 8 மணி, பிற்பகல் 12.45 மணி என 3 நேரங்களில் அரவட்லா மலை கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட வில்லை.
காத்திருந்த மக்கள்
காலை 11 மணியளவில் பேரணாம்பட்டு பஸ் நிலையத்தில் பணிமனை தொழில்நுட்ப பணியாளர்கள் அரவட்லா செல்லும் அரசு பஸ்சை எடுத்து வந்து நிறுத்திவிட்டு சென்றனர்.
மலை கிராம மக்கள், பெண்களும் நீண்ட நேரம் பஸ்சை அரவட்லா மலை கிராமத்திற்கு இயக்குவார்கள் என வெயிலில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
பொறுமை இழந்த மக்கள் பஸ்சை மட்டும் நிறுத்திவிட்டு செல்கிறீர்களே ஏன் இயக்கவில்லை என கேட்டதற்கு வேலூரில் இருந்து அதிகாரி வருவதால் பஸ் நிலையத்தில் நிறுத்தி விட்டு சென்றதாக கூறப்பட்டது. இதனால் கிராம மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் வேறு ஒரு வழித்தட டிரைவரை மாற்றி மாலை 4.30 மணியளவில் அரவட்லா மலை கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது:-
போராட்டம் நடத்தப்படும்
ஆம்பூரிலிருந்து இரவு 10 மணிக்கு பேரணாம்பட்டிற்கு புறப்பட வேண்டும், ஆ
னால் 15 நிமிடம் முன்னதாக 9.45 மணிக்குள் இயக்கப்படுவதால் இந்த பஸ்சானது ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டிற்கு வர கடைசி பஸ் ஆகும். ஒவ்வொரு வாரத்திலும் ஒரு சில நாட்களில் இவ்வாறு நடப்பதால் பொதுமக்கள் இரவு நேரத்தில் ஆம்பூரிலிருந்து பள்ளிகொண்டாவிற்கு நீண்ட தூரம் சுற்றி சென்று பின்னர் அங்கிருந்து பேரணாம்பட்டிற்கு இரவு நேரத்தில் சிரமப்பட்டு வந்தடைகின்றனர்.
தற்போது சரிவர இயக்கப்படாத காரணத்தினால் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளிகளில் நடைபெற்று வரும் சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் அதிக வருவாயை ஈட்டித் தரும் அரவட்லா மலை கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ்சை டிரைவர்களை தினசரி பணியில் அமர்த்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ்சை சரிவர இயக்காவிட்டால் அரசு பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.