தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்
தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் பொதுமக்கள்
திருப்பூர்
திருப்பூரின் முக்கிய போக்குவரத்தில் ஒன்றாக ரெயில் போக்குவரத்து உள்ளது. பொதுவாக நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு குறுகிய பாதையையே ேதர்வு செய்வோம். அதுபோல் பொதுமக்கள் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். ஆனால் அதன் ஆபத்தை உணராமல் கடந்து செல்கின்றனர். இதனால் சிலர் எதிர்பாராதவிதமாக ரெயிலில் மோதி உடல் சிதறி பலியாகின்றனர். இதற்கு ரெயில்வே நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
திருப்பூரில் மட்டும் மாதத்திற்கு 5 பேர் ரெயில் மோதி இறக்கின்றனர். இதற்கு இரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்புக்கு வழிவகுக்க வேண்டும். அதுபோல் மக்களும் தங்கள் நலனில் அக்கறை காட்டி சிரமம் பார்க்காமல் முறையாக பயணிக்க வேண்டும்.