ரெயிலில் பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

ரெயிலில் நகைகள் அணிந்து கொண்டு பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-04-03 18:45 GMT


ரெயிலில் நகைகள் அணிந்து கொண்டு பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மக்கள் கூட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் கடந்த 1-ந் தேதி நடந்தது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பொது மக்கள் வந்து கலந்து கொண்டனர். தேரை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். காலை 7.30 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் மாலை 6 மணிக்கு நிலையை அடைந்தது.

தேரோட்டத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதுபோல் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

விழிப்புணர்வு

தொடர்ந்து தேரை காண மக்கள் வந்த வண்ணம் உள்ளதால், திருவாரூர் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அதன்படி திருவாரூர் ரெயில்நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, துணை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலாஸ் ஆகியோர் பொது மக்களுக்கு துண்டுபிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட வேண்டாம். ஜன்னல் அருகே நகைகள் அணிந்து பயணம் செய்பவர்கள் குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை பார்த்தால் அதை தொடவோ, எடுக்கவோ வேண்டாம். ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் படிகட்டில் உட்கார வேண்டாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்