செந்துறை பகுதியில் திடீர் மின் தடையால் பொதுமக்கள் அவதி
செந்துறை பகுதியில் திடீர் மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்திற்கு அரியலூரில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் பெறப்படுகிறது. இங்கிருந்து செந்துறை, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், பொன்பரப்பி உள்ளிட்ட தாலுகாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் செந்துறை பகுதியை சேர்ந்த அலுவலர்களும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர். அரியலூர்-செந்துறை சாலை விரிவாக்க பணியின்போது இடையூறாக இருந்த மின்கம்பங்களை மாற்றுவதற்காக இந்த அறிவிக்கப்படாத திடீர் மின் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.