குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

Update: 2022-08-15 21:20 GMT

திருச்சி உறையூர் டாக்கர்ரோடு வள்ளுவர்தெரு பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் சரியாக வருவதில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று காலை 11.30 மணியளவில் குடிநீர் வராததை கண்டித்து வள்ளுவர்தெரு சந்திப்பு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சி உதவி ஆணையர் ராஜேஷ்கண்ணா, இளநிலை பொறியாளர் புஷ்பராணி, தில்லைநகர் சரக போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்