பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-11-11 18:45 GMT

மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றும்(சனிக்கிழமை), நாளை(ஞாயிற்றுக்கிழமை) மிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிக அபாய எச்சரிக்கையாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம். மின் கம்பங்களை தொடக்கூடாது. குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவேண்டும், மீனவர்கள் மீன்பிடிக்ககடலுக்கு செல்ல வேண்டாம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04364-222588 9487544588 என்ற எண்ணிலும் 8148917588 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்