கடுமையான வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் சாமி தரிசனம் செய்தார்.
சென்னை,
சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்பு பக்தர்களுக்கு இனிப்புகளை பிரசாதமாக வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடுமையான வெயிலில் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், வெயிலால் 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அவ்வாறு சென்றாலும் குடை அல்லது துணியால் தலையை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.