சிரமத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் - அமைச்சர் கே.என்.நேரு

கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் சிரமத்தை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-21 07:17 GMT

திருச்சி,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சாலைப் பணிகள், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இந்த பணிகளால் ஒருசில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு, லேசான விபத்து, போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சாலைப் பணிகள், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைப் பணிகள், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் சிரமத்தை

மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை தடுக்க நவீன இயந்திரங்களின் வசதிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்