சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி
கோவை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஆனைக்கட்டி மலைப்பகுதி, அனுவாவி சுப்பிரமணிசாமி கோவில், பொன்னுத்துமலை ஆகிய பகுதிகளில் யானைகள், கரடி, மான்கள் உள்பட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கோவையை அடுத்த கணுவாய் திருவள்ளுவர் நகரில் மணி என்பது வீட்டுக்கு முன்பு கடந்த 3 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக தெரிகிறது. அப்போது ஆடுகள் மற்றும் நாய்கள் குரைத்த சத்தம் கேட்டு உள்ளது. சிறுத்தை நடமாட்டம் குறித்த அறிந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இது குறித்து பன்னிமடை ஊராட்சி தலைவர் ரத்தினம் மருதாசலம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு பதிந்து இருந்த கால் தடயங் களை வைத்து சிறுத்தை வந்து சென்றது உறுதி செய்தனர்.
இதைய டுத்து தற்போது அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கணுவாய் மலைப் பகுதியில் இருந்து யானைகள் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தற்போது 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
---
Image1 File Name : 13811941.jpg
----
Reporter : D.P.RAJENDRAN Location : Coimbatore - THUDIYALUR