டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2023-04-17 10:40 GMT

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்தனர். இடுவாய் அண்ணாமலையார், திருமலை, ஜி.என்.கார்டன்கள் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், இடுவாய் சீராணம்பாளையத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அந்த கடையை இடுவாய் சின்னகாளிபாளையம் சாலையில் விவசாய தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதிக்கு மாற்ற இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

விவசாய தோட்டங்களுக்கு இரவு, பகலாக சென்று வரும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் அமைக்கக்கூடாது' என்று கூறியுள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்