கரூரில் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்
கரூரில் ஓணம் பண்டிகைகயை கேரள மக்கள் கொண்டாடினார்கள்.
கரூரில் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்று கூடி நேற்று கேரள சமாஜம் சங்கம் சார்பில் ஓணம் திருவிழாவை ெகாண்டாடினர். இதையொட்டி அங்கு அத்திப்பூ கோலமிடப்பட்டு இருந்தது. செண்டை மேளம் முழங்க பாரம்பரிய உடை அணிந்து அனைவரும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ஓணம் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.