மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
குத்தாலம் அருகே ஆனைமேலகரம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆனைமேலகரம் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமாரசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் கஸ்தூரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாவட்ட பொதுச் செயலாளர்கள், அனைத்து கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.