கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதி

கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-11 10:22 GMT

ஆரணி

கடும் பனிப்பொழிவால் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மார்கழி மாதம் முடிய இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் கடந்த சில தினங்களாகவே நள்ளிரவு முதல் காலை வரை பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. நேற்று காலை கடுமையான பனிப்பொழிவு இருந்தது.

பனியை பொருட்படுத்தாமல் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் பனிப்பொழிவு அதிகம் காரணமாக நடை பயிற்சிக்கு செல்பவர்கள் காய்ச்சல், சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் செல்வோர் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு பனி கொட்டுவதால் அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்