கருணைக்கொலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் தெரிவித்து கருணைக்கொலை செய்யக்கோரி பதாகைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிராம மக்கள் வந்தனர்.
மயிலாடுதுறை;
ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் தெரிவித்து கருணைக்கொலை செய்யக்கோரி பதாகைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மீனவ கிராம மக்கள் வந்தனர்.
மீனவ கிராமத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள ஒரு மீனவர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மாறிய 7 மீனவ குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக அந்த குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளுடன் கையில் கருணை கொலை செய்யுங்கள் என்ற பதாகைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
நடவடிக்கை
தொடர்ந்து அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் என கூறி மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மகாபாரதி, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.