குளச்சல் துறைமுகத்தில்மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
குளச்சல் துறைமுகத்தில்மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
குளச்சல்:
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை)உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தொழில் மற்றும் வேலை பார்க்கும் குமரி மாவட்ட மக்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். பண்டிகையையொட்டி நேற்று கேக், பலகாரம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், ஆடைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு குடும்பத்துடன் குளச்சல் கடை வீதிகளில் குவிந்தனர். இதேபோல் வெளி மாவட்டங்களில் சொந்த ஊர் திரும்பிய குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று மீன்கன் வாங்குவதற்காக மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். வழக்கமான அளவு மீன்களே வந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனாலும், வெளியூர் மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். இதனால் உள்ளூர் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.