கல்லணையில் குவிந்த மக்கள்

விடுமுறையை கொண்டாட நேற்று கல்லணையில் மக்கள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-07-30 19:45 GMT

விடுமுறையை கொண்டாட நேற்று கல்லணையில் மக்கள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

கல்லணை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கல்லணையில் வார விடுமுறை நாட்களில் கூட்டத்தால் திணறி வருகிறது. விடுமுறை நாளான நேற்று வழக்கம்போல காலை முதல் மாலை வரை கல்லணையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கல்லணை பாலங்கள் மேல் நின்றபடி மக்கள் தண்ணீர் வெளியே சீறிப்பாய்ந்து செல்லும் அழகை பார்த்து வியந்து ரசித்தனர். கல்லணையில் வெண்ணாற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

உற்சாக குளியல்

காவிரியில் முழு அளவில் தண்ணீர் திறந்து வெளியேறிக் கொண்டிருந்தது. காவிரி ஆற்றின் பாலத்தின் அருகே சிறிய அளவிலான தண்ணீர் செல்லும் கால்வாயில் மக்கள் கூட்டம் கூட்டமாக உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குளியல் தொட்டிக்கு அருகில் ஆற்றில் இறங்கி திரளான மக்கள் குளித்தனர். குழந்தைகள் பூங்கா, கரிகாலன் பூங்கா, மணிமண்டபம் உள்ளிட்ட கல்லணையின் அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பாலங்களில் மற்றும் மக்கள் குளிக்கும் இடங்களிலும் தோகூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்